தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அட்சய பாத்திர திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடைபெறும்' - கி. வீரமணி - கி.வீரமணி

தஞ்சை: அட்சய பாத்திரம் என்ற பெயரில் சத்துணவுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்த்திருப்பதை அரசு உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

If the nutrition plan is not withdrawn from the individual, the struggle will erupt  K Veeramani
சத்துணவுத் திட்டத்தை தனியாரிடமிருந்து திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - கி.வீரமணி

By

Published : Feb 23, 2020, 7:39 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டார்.

அப்ப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “வறுமையின் காரணமாகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்லும் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காக நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில், அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு சில பள்ளிகளில் தொடங்கப்பட்ட உணவுத் திட்டத்தை, காமராஜர் அரசு மதிய உணவுத் திட்டமாகத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.

காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம், பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. பிறகு, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டத்தில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில், சத்துணவுத் திட்டத்தில் பயறுகள் போன்ற இதர சத்துணவுப் பொருள்கள் கொண்டுவரப்பட்டன. கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவருகிற இந்தத் திட்டத்தை பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அட்சய பாத்திரம்’ என்ற தனியார் அறக்கட்டளையிடம் தாரை வார்த்திருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, மதச்சார்பின்மைக்கு விரோதமானது.

சத்துணவுத் திட்டத்தை தனியாரிடமிருந்து திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - கி. வீரமணி

இங்கு தயாரிக்கப்படும் உணவுகளில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனால் உணவின் சுவை குறைந்து, பெரும்பாலான மாணவர்கள் அவர்களின் உணவுகளை உண்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த வருடம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானது. ஆனால், இந்த அறக்கட்டளை சத்தான உணவையே தயாரிப்பதில்லை என்றும் வேறு சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணங்கள், பயன்கள் கொண்ட பூண்டு, வெங்காயம் போன்றவை உணவில் இல்லை என்றால், அது எப்படி சத்தான உணவாக இருக்க முடியும். அது முழுமையான சத்தான உணவாக இருக்காது. தனியார் அமைப்பு உணவளித்தால் அவர்களின் விருப்பம் போல தான் வழங்குவார்கள்.

ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்தப் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.மாணவர்களின் உடல், மன வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தும் கலந்த உணவை வழங்க வேண்டும். இதையே அரசு செய்தால் அவர்களிடம் ஏன் எனக் கேள்வி கேட்கலாம். ஆனால், அட்சய பாத்திரம் என்ற பெயரில் அளிக்கும் தனியாரிடம் சென்று அப்படி கேட்க முடியாது. அதனால் இந்தத் திட்டத்தை அரசு மீண்டும் பழையபடி எடுத்து நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் திராவிடர் கழகம் தலைமையில் ஒத்த கருத்துடைய அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க : பழங்குடிகளின் கான்கிரீட் வீடு கனவு நிறைவேறுமா?

ABOUT THE AUTHOR

...view details