தஞ்சாவூர்:ஒரத்தநாடு புதுார் கிராமத்தில், ஸ்ரீ யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான கோயில் சிதலமடைந்த நிலையில், கிராம மக்கள் சார்பில், கடந்த 2017ஆம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகளை தொடங்கப்பட்டது.
இப்பணிகள், அறநிலையத்துறை சார்பில் 29 லட்சம் பொதுமக்கள் சார்பில் நிதி திரட்டப்பட்டு, சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
சிலைகள் வடிவமைப்பு
இக்கோயில் முழுவதும் கருங்கல்லை கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 70 அடி நீளமும், 36 அகலமும் கொண்ட மகா மண்டபத்தில், கலை நுட்பத்துடன் கூடிய 32 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் மகாமண்டப முகப்பில் இருபுறம் வைப்பதற்காக யானை மற்றும் குதிரை சிலைகள், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில் 23 டன் அளவிற்கு யானை சிலையும், 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில் 12 டன் அளவிற்கு குதிரை சிலையும், சுமார் 11 அடி உயரமும் 13 அடி நீளமும் கொண்ட அளவில் ஆறு மாதங்களாக வடிமைக்கப்பட்டன.
பொறுத்தப்பட்ட சிலைகள்
மேள தாளம் முழங்க பொறுத்தப்பட்ட சிலைகள்... இவ்விரண்டு சிலைகளும் நேற்று (செப்.02) மாலை திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. பின்னர் மேள தாளம் முழங்க, கடைவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இச்சிலைகளை பக்தர்கள் பலரும் வழியில் மலர் துாவி வரவேற்று வழிபட்டனர்.
இதையடுத்து கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இரு சிலைகளும் பீடத்தில் பொறுத்தப்பட்டன. பின்னர் தொடர்ந்து இரு சிலைகளுக்கும் பட்டுத்துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அஞ்சலி செலுத்த கட்டுப்பாடுகள்