தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருவோணம் ஒன்றியத்திற்குள்பட்ட கொள்ளுக்காடு புதுநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மின்கசிவின் காரணமாக நேற்று அவருடைய குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்தத் தீ விபத்தின்போது வீட்டிலிருந்த எரிவாயு உருளை பலத்த சத்தத்துடன் வெடித்து வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலாகின.