தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயராஜன் (35). இவரது மனைவி சசிகலா (33). இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த உதயராஜன், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனைவி சசிகலாவை அரிவாளால் தலையின் பின்புறம் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.