தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பதி தற்கொலை: பரிதவிக்கும் இரண்டு வயதுக் குழந்தை! - suicide

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே இரண்டு வயதுக் குழந்தையை விட்டுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட தம்பதி: பறிதவிக்கும் இரண்டு வயது குழந்தை!

By

Published : Apr 25, 2019, 7:31 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் சமையல்காரராக பணியாற்றி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு நரேஷ்மதன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.

நேற்று காலை வெகு நேரமாகியும் இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், குழந்தையின் அழுகுரல் மட்டும் வீட்டிற்கு வெளியே கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாலமுருகன் தூக்கிட்டும், அருணா விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தஅக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், சடலங்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details