தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - devotees

தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும், 108 வைணவ ஸ்தலங்களில் 20வது ஸ்தலமாக போற்றப்படும் நாச்சியார் கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில்  கல்கருட சேவை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலக பிரசித்தி பெற்ற கல்கருட சேவை

By

Published : Mar 16, 2019, 8:23 AM IST

108 வைணவதலங்களில் 20வது திவ்யதேசமாகும் சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்யதேசமாக ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் போற்றப்படுகிறது. நாள்தோறும் 6 கால பூஜைகள் நடைபெறும் வருடத்தில், மார்கழி மற்றும் பங்குனி என 2 முறைமட்டுமே சன்னதியில் இருந்து வெளி வரும் இக்கல்கருட பகவானை முதலில் சன்னதியில்இருந்து வெளியே வரும் போது 4 பேரும் தொடர்ந்து 8, 16, 32, 64 என 128 பேர் எனதூக்குபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லுவதும், மீண்டும் சன்னதிக்குதிரும்பும் போது 64, 32, 16, 8 என குறைந்து 4 பேருடன் சன்னதியை சென்றடைவதுவழக்கம்.

இக்கல்கருட பகவானை தொடர்ந்து 7 வியாழக்கிழமை தொடர்ந்து வழிபடுவதன் மூலம்பிராத்தணைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில், பங்குனி திருத்தேர் திருவிழா 10 நாட்களுக்குநடைபெறுவது வழக்கம். அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 12ம் தேதிசெவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ,அன்னபட்சி, கமல, அனுமன், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான நேற்று உலக பிரசித்திபெற்ற கல்கருட சேவை நடைபெற்றது. இதில் கல்கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்த பெருமாளை ஆயிரக்கணக்காண பக்தர்கள்தரிசனம் செய்துமகிழ்ந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details