கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டங்களில் விவசாயத்தை போலவே, அதிக அளவில் கிராமப்புறங்களில் வீடுகளில் கால்நடைகள் வளர்ப்பும் இருந்து வரும் நிலையில், தற்போது, கடந்த சில வாரங்களாக, கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், வில்லியவரம்பல், இளந்துறை, உள்ளிட்ட பல கிராமங்களில், அம்மை நோய் கடுமையாக கால்நடைகளை தாக்கி வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், பெரிய மாடுகளை விட கன்று குட்டிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மாடு மற்றும் கன்றுகளுக்கு சிறு புண் போல வந்து பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடைகள் சரியான உணவு மற்றும் தண்ணீர் எடுக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
கால்நடை மருத்துவர்கள் இக்கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்த போதும், இதன் தீவிரம் குறைந்ததாக தெரியவில்லை. இந்நோய் வேகமாக அடுத்தடுத்துள்ள கிராமங்களுக்கு பரவி விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் இதற்கு எப்படி தீர்வு காண்பது என தெரியாமல் மனமுடைந்து நிற்கின்றனர்.
எனவே தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக விரைந்து நோய் தொற்றுள்ள கிராமங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்கான அம்மை நோய் பரவலையும், நூற்றுக்கணக்காண கால்நடைகளின் உயிரிழப்பையும் தடுத்து நிறுத்திட வேண்டும் என கால்நடை வளர்ப்போர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான கால்நடைகள் அம்மை நோயால் பாதிப்பு இதையும் படிங்க:என்னதான் ஆச்சு என்ஜினியரிங் படிப்பு ? தெறித்து ஓடும் மாணவர்கள்.. கல்வியாளர்கள் கூறுவது என்ன?