தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைக் கிடங்கில் மனித தலைகள்... மக்கள் அதிர்ச்சி! - thanjavur district news

தஞ்சாவூர் குப்பைக் கிடங்கில் ஐந்துக்கும் மேற்பட்ட மனித தலைகளும் உடல் உறுப்புகளும் கிடந்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

human-heads-in-the-trash-in-thanjavur
human-heads-in-the-trash-in-thanjavur

By

Published : Aug 25, 2021, 10:39 AM IST

தஞ்சாவூர்:திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒன்பத்துவேலி பகுதியில் உள்ள குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில், ஐந்துக்கும் மேற்பட்ட மனிதத் தலைகள், மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் உள்ளிட்ட மனித உடல் உறுப்புகள் கிடந்துள்ளன.

குப்பைக் கிடங்கில் மனித தலைகள்...

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காகச் சென்ற மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் விசாரித்தபோது, அவை மருத்துவமனைக் கழிவுகள் என்று தெரிய வந்தது. திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் அங்கு ஈடுபட்டுள்ளனர்.

அப்புறப்படுத்தப்படாத மருத்துவமனைக் கழிவுகள்

அப்போது உடற்கூராய்வுக்கு பிறகு முறையாக அப்புறப்படுத்தாமல்பாட்டில்களிலும் பெட்டிகளிலும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தஅடையாளம் தெரியாத சடலங்களிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் அனைத்தையும் ஆற்றங்கரையில் அவர்கள் தூக்கி வீசிச் சென்றது தெரிய வந்தது

இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், நோய் தொற்று பரப்பும் வகையிலும் செயல்பபட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : அங்கன்வாடியில் சத்துணவு வழங்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details