தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேர்மைக்குப் பரிசு - வி.ஏ.ஓ பிறந்த நாளைக் கொண்டாடிய கிராம மக்கள்!

சான்றிதழ்கள் வழங்கப் பணம் ஏதும் வாங்காமல் நன்முறையில் சேவையாற்றிய கிராம நிர்வாக அலுவலரின் பிறந்த நாளை நேற்று (ஜூலை 7) மாலை கிராம மக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாளை கொண்டாடிய கிராம மக்கள்
கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாளை கொண்டாடிய கிராம மக்கள்

By

Published : Jul 8, 2021, 3:04 PM IST

தஞ்சாவூர் அருகே வல்லம்புதூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுபவர் பி. செந்தில் குமார் (46). இவர் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றபின், கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

மக்களுக்குச் சேவை

கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான சான்றிதழ்களை உரிய நேரத்தில் வழங்குவது, கிராம மக்களிடம் எளிதில் பழகுவது, அவர்களை அலைக்கழிக்காமல் உரிய சேவைகளை வழங்குவது, கஜா புயல், கரோனா நிவாரணப் பொருள்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்குவது, ஓய்வூதியம் பெரும் முதியோருக்கு தன்னுடைய செலவில் அரிசி வழங்குவது எனத் தொடர்ந்து சேவையை செய்துவருகிறார்.

கிராம நிர்வாக அலுவலரின் பிறந்தநாளை கொண்டாடிய கிராம மக்கள்

இந்த கிராமத்துக்கு பணிபுரியவந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்ததால், அவருடைய பிறந்த நாளான நேற்று (ஜூலை 7) மாலை குருவாடிப்பட்டி கிராம மக்கள் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து கேக் வெட்டி, செந்தில் குமாரை வாழ்த்தி கும்மியடித்துப் பாடி கொண்டாடினர்.

இதையும் படிங்க:'மகனின் சைக்கிளை உழவு இயந்திரமாகப் பயன்படுத்திய விவசாயிக்கு உதவிய திமுகவினர்!'

ABOUT THE AUTHOR

...view details