தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரிய கோயில் கும்பாபிஷேகம் - தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க கோரிக்கை - பெரிய கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூர்: பெரிய கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளித்து அனைத்து தரப்பு மக்களும் விழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்துறைபூண்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

holidays-should-be-announced-for-tanjavur-temple-festival
holidays-should-be-announced-for-tanjavur-temple-festival

By

Published : Feb 1, 2020, 1:23 PM IST

உலகிலேயே மிகப்பெரிய கோயிலான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 5ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மிகப்பெரிய கோயிலும், பழமையான கோயிலுமான தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் ஆசிய கண்டம் முழுவதும் வெற்றி வாகை சூடிய மன்னராவார்.

அவரது புகழ் ஓங்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தைக் காண அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.

வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்

ABOUT THE AUTHOR

...view details