தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடு புதூர் கிராமத்தில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகை வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தப் பண்டிகையை கொண்டாடுபவர்களில் பெரும்பாலோனார் இந்துக்களே.
அவ்வூரின் இருந்த முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி, தற்போது அக்கிராமத்தில் உள்ள 5 இஸ்லாமிய குடும்பங்களுடன் சேர்ந்து, மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்தப் பண்டிகையையொட்டி, 'அல்லா சாமி' என்ற அழைக்கப்படும் உள்ளங்கை உருவத்தை ஊரின் மையத்தில் இருக்கும் சாவடியில் இருந்து வெளியே எடுத்து அதற்கு பத்து நாள்கள் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் இவ்வூர் மக்கள். பூஜை நடக்கும் பத்து நாளும் விரதம் இருக்கும் இவ்வூர் மக்கள், நேற்று இரவு உள்ளங்கை உருவத்தை வீதியுலவாக எடுத்துவந்தனர்.