தஞ்சை அருகே மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சமுத்திரம் ஏரி மற்றும் கரையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.
பெரிய கோயிலின் முன்பு இந்து எழுச்சி பேரவை ஆர்ப்பாட்டம் - Thanjavur mariamman temple
தஞ்சையில் ஆதி மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை பெரிய கோயிலின் முன்பு இந்து எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை
இதனையடுத்து நேற்று முன்தினம் ஆதி மாரியம்மன் கோயில் மற்றும் 60 அடி நீளமுள்ள சிவலிங்கமும் இடிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று தஞ்சை பெரிய கோயிலின் முன்பு இந்து எழுச்சி பேரவையினர் தலைவர் பழ சந்தோஷ் குமார் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.