நடிகை வனிதா தஞ்சாவூர் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேட்டி ஒன்றின்போது தெரிவித்தார்.
அதில் தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது சகஜம். தன் தந்தையும் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டவர்தான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழர்கள் கலாச்சாரத்தின்படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறையை தாண்டி நடிகை வனிதா பேசியிருப்பது தஞ்சை மக்களை அவமதிக்கும் செயல், இது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் என்றும் கூறி வனிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தி தலைமையில் மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட வனிதா விஜயகுமார்!