தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 19, 2020, 4:04 PM IST

ETV Bharat / state

'இந்து கோயில்களை இழிவுப்படுத்துவதை தண்டிக்க சட்டம் இயற்ற வேண்டும்'

தஞ்சாவூர்: இந்து தெய்வங்களையும், கோயில்களையும், இழிவுப்படுத்தி பேசுபவர்களை தண்டிக்கும் வகையில் அறநிலையத்துறையின் கீழ் புதியச் சட்டம் இயற்ற இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Hindu maha sabha petition to enact new law
Hindu maha sabha petition to enact new law

அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினார்.

அதில், "இந்து தெய்வங்களையும், கோயில்களையும் இழிவுப்படுத்தி பேசுபவர்கள், சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஆண்டாள் குறித்து வைரமுத்து, தஞ்சாவூர் பெரிய கோயில் குறித்து ஜோதிகா, அம்மன் அபிஷேகம் குறித்து விஜய்சேதுபதி, ராமபிரான் குறித்து கி. வீரமணி, கோயில் கட்டடக் கலை குறித்து விமர்சித்த திருமாவளவன் என நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்களின் பட்டியல் நீள்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. இதற்கு வலுவான சட்டம் இல்லாததே காரணம். எனவே இத்தகையோருக்கு கடும் தண்டனை கொடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை புதிய சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த கோரிக்கை மனுவினை கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து இன்று அனுப்பி வைத்தார். மேலும், இதன் மீது உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க... விஜய்சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பு புகார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details