தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் - காவலர்கள் முன்னிலையில் வெளியீடு! - Helmet awareness short film in thanjavur

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் காவல் துறையினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

Helmet awareness short film
Helmet awareness short film

By

Published : Dec 20, 2019, 4:05 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சஞ்சாய நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது இயக்கத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில் குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த குறும்படம் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து பிரிவு காவலர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அப்போது, காவல் ஆய்வாளர் பெரியசாமி பேசுகையில், ‘இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம்

அதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் போடவேண்டும். இந்த குறும்படம் பொதுமக்கள், ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:

குமரி டூ காஷ்மீர்: கலாசார விழிப்புணர்வு சைக்கிள் பயணம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details