தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிராம்பட்டினம் அருகே கடலில் மூழ்கி ஒருவர் பலி! - Drowning

தஞ்சை: பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பலியானார்.

நீரில் மூழ்கி பலியான சுப்ரமணியன்

By

Published : Feb 13, 2019, 11:57 PM IST

நீரில் மூழ்கி பலியான சுப்ரமணியன்
பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் வயது (45). இவர் தனது நண்பர்களான தமிழரசன், காத்தாடி ராஜா, கட்டபழனி ஆகியோருடன் இணைந்து அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரைக்குச் சென்றார். அப்போது நண்பர்கள் அனைவரும் கடலில் இறங்கி நீராடி கொண்டிருக்கையில் சுப்ரமணியன் திடீரென மாயமானார்.

இதையடுத்து பதட்டமடைந்த அவரது நண்பர்கள் சிறிது நேரம் சுப்ரமணியனை தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கடலில் சற்று தொலைவில் சுப்ரமணியன் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினருக்கு அவரது நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர் சுப்ரமணியன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details