தஞ்சாவூர்:தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் இருதயராஜ் - ஜாய்லின் தம்பதி. இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர். இவர்களது மகள் மார்ட்டினா ஜாய்ஸ் (24), தஞ்சையில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.பி.ஏ மார்க்கெட்டிங் துறையில் கல்வி பயின்று வந்துள்ளார்.
இதையடுத்து நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் வெற்றி பெற்று, தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக அவருக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த பதக்கத்தினை நேற்று (ஜன.2) திருச்சியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடியின் கையால் பெற்றுள்ளார். இது குறித்து எம்.பி.ஏபட்டதாரி மார்ட்டினா ஜாய்ஸ் கூறுகையில், “தான் படித்த கல்லூரியின் நோக்கம், வேலை தேடுபவனாக இருக்காதே, வேலை அளிப்பவனாக இரு என்பதுதான்.
அந்த நோக்கத்தின்படி கல்வி பயின்றேன், அதுதான் தன்னை பிற்காலத்தில் தொழில் முனைவராக ஆக்குவதற்கு ஊக்கத்தை அளித்தது. கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள், எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார்கள். அவர்கள் கற்றுத் தரும் பாடங்களை உள்வாங்கிப் படித்ததன் மூலம், தரவரிசைப் பட்டியலுக்கு வர முடிந்தது. பிரதமர் மோடியின் கையால் பட்டம் மற்றும் தங்கப்பதக்கம் வாங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.