தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு வருஷம் ஆச்சுல... பாதிப்புகளை பட்டியலிட்ட மக்கள் - தஞ்சாவூரில் நீதிபதிகள் பங்கேற்ற குறைகேட்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர்: பேரிடர் நிவாரணத் தொகையை சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என, நீதிபதி சுதா உறுதியளித்துள்ளார்.

பாதிப்புகளை பட்டியலிட்ட மக்கள்

By

Published : Oct 25, 2019, 3:14 AM IST

தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பட்டுக்கோட்டை மாளியக்காடு கிராமத்தில் கஜா உள்ளிட்ட பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி சுதா, உதவி அமர்வு நீதிபதி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கஜா உள்ளிட்ட பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குறைகேட்பு நிகழ்ச்சி

கஜா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அவர்களிடமிருந்து குறைகளை கேட்டு அதை நிறைவேற்றுவதே இந்த சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நோக்கம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகளின் போது வழங்கப்படவேண்டிய நிவாரணத் தொகை ஆடு, மாடுகள், பயிர் இழப்பீட்டுத் தொகைகள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில் இந்த சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மருத்துவக் குழுவும் உள்ளதால் அதன்மூலம் மருத்துவ உதவிகளையும் செய்ய முடியும். எனவே இந்த ஆணைக்குழுவை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதில் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதையும் படியுங்க :

கஜா புயலுக்கு பின்னரும் தொடரும் சோகம்: திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ வேதனை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details