தஞ்சாவூர்:தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் மக்களின் பல்வேறு பழக்கவழங்களும் மாறிவருகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு பழக்கவழங்கள் அதிகளவில் மாறியுள்ளது. இவ்வாறு மாறி வரும் உணவு பழக்கங்களினால் தாது உப்புக்கள் நிறைந்த, சிறு தானிய உணவு வகைகளை இன்று மறந்து போனோம்.
இதன் விளைவாக நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நாம் அதிக எண்ணிக்கையில் ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நோய்களை தவிர்த்திடும் வகையில் அன்றாட உணவில் கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம் போன்ற ஏதேனும் ஒரு சிறு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்ளும்போது அனைத்து வகை நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள வழி உண்டு.