தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்தா? தனியார் விளம்பர வாகனமா? பொதுமக்கள் குழப்பம்! - kumbakonam news

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்குச் சொந்தமான பேருந்தில் முழுமையாக விளம்பரம் செய்யப்பட்டதால், அது அரசுப் பேருந்தா இல்லை தனியார் விளம்பர வாகனமா என்ற குழப்பத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பேருந்து
தமிழ்நாடு அரசு பேருந்து

By

Published : Jul 13, 2023, 11:04 PM IST

தமிழ்நாடு அரசு பேருந்து

தஞ்சாவூர்:கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து வந்தது. கும்பகோணம் - சென்னை வழித்தடத்தில் செல்லும் இந்த ஏசி பேருந்தில் முகப்பு பக்கத்தைத் தவிர்த்து, மற்ற மூன்று பக்கம் முழுவதும் ஆர்.கே.ஜி நெய்யின் விளம்பர புகைப்படம் மற்றும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் பலரும், இது அரசு விரைவு பேருந்தா அல்லது நெய் நிறுவனத்தின் விளம்பர வாகனமா என வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

இப்படி நடமாடும் விளம்பர பேருந்தாக மாற்றப்பட்டுள்ள இந்த குளிர்சாதன அரசு சொகுசு பேருந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் வாயை பிளந்தபடி பார்த்துச் செல்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட நேரிடம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு மாதாந்திர நிலுவைத் தொகையை வசூலிக்க இடைக்கால தடை!

விளம்பர வருவாய் என்ற ஒற்றை நோக்கோடு, பொதுமக்களின் உயிரோடு அரசு விளையாட கூடாது என்றும், இதனை பகுதி அளவு விளம்பரம் கொண்ட வாகனமாக வேண்டுமானால் இயக்கலாம் என்றும், தனியார் விளம்பர வாகனம் போல காட்சியளிக்கும் இந்த அரசு விரைவு பேருந்தை தொடர்ந்து இயக்குவது பெரும் விபரீதங்களையே ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் இது குறித்து அரசு மற்றும் போக்குவரத்து துறையும் மறுபரிசீலனை செய்திட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பேருந்து அரசுக்குச் சொந்தமான பேருந்துதானா என கண்டறிவது உண்மையில் பொதுமக்களுக்கு சிக்கலாகத்தான் உள்ளது.

இதை போன்ற தொலை தூரம் செல்லும் பேருந்துகள் இப்படி கவனம் ஈர்க்கும் வண்ணம் சாலையில் செல்வது நிச்சயம் ஆபத்தானது தான். கடந்த அண்டு சென்னையில் நடந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பரத்தையும் அரசு பேருந்துகளில் இதை போன்ற விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மேயர், துணை மேயர் உள்ளிட்டோருக்கு மதிப்பூதியம் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details