கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திருவையாறு பேரூராட்சி பகுதியில் இதுவரை யாருக்கும் நோய்தொற்று ஏற்படவில்லை என்பதையும், இனிவரும் நாள்களில் எந்த ஒரு நபருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊடகத் துறை, பேரூராட்சி துறை ஆகியவை இணைந்து முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துகொண்டனர்.