தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையிலான கடற்கரை பகுதிகளில் 32 மீன்பிடி தளங்கள் உள்ளன இதன்மூலம் 1500க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்றன.
மேலும், இதன் மூலம் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இன்று முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ள நிலையில். கஜா புயலின்போது நிறுத்தப்பட்ட மீன்பிடித் தொழிலில் சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகள் இதுவரை சீரமைக்கப்படாததால் பெரும்பான்மையான படகுகள் இன்னும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் ஏராளமான மீனவ குடும்பங்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர். மேலும் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு அரசு தற்போது மீன் பிடி தடை கால நிவாரண தொகையாக மீனவர்களுக்கு, அதாவது இந்த 60 நாட்களுக்கு 5000ரூபாய் வழங்கி வருகிறது.
இரண்டு மாத கால நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும்பட்சத்தில் வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில் இந்த நிவாரணத் தொகை 5,000 ரூபாய் போதுமானதாக இல்லை என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் நிவாரணத் தொகையை பத்தாயிரமாக உயர்த்தி தரவேண்டும் என்று மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மீனவர் காளிதாசின் கோரிக்கை