தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருப்பந்துறை மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சாவித்திரி. இவர் தனது குடிசை வீட்டின் முன்பகுதியில், டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. இதனால், பக்கத்தில் உள்ள வீட்டிலும் தீப் பற்றியது. அந்த வகையில், மலர்க்கொடி என்பவரது குடிசை வீடும் எரிந்து நாசமானது. இதனிடையே தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ரூபாய் 3 லட்சம் வீடு உபயோகப் பொருள்கள் முற்றிலும் நாசமானது.
குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில் 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம் - Kumbakonam
கும்பகோணம் அருகே இரு குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில், ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது
கும்பகோணம் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!!
இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த தீ விபத்து, மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: போலீசாரிடம் சிலையை விற்க வந்த கடத்தல்காரர்கள் சிக்கிய கதை..!