தஞ்சை மேலவஸ்தவசாவடியில் வசிப்பவர் சுவாமிநாதன். இவரது சொந்த ஊர் சோழகன் குடிகாடு, சொந்த ஊருக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வரும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 1,500 ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும், வீட்டின் அருகிலேயே அவரது சகோதரி இந்திரா என்பவரது வீடு உள்ளது. அந்த வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த 17 சவரன் நகை 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4.5 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.