தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2019, 11:16 PM IST

ETV Bharat / state

மதுவிற்கு பதில் இனிப்பு! - அரசுக்கு பொன்னாரின் அறிவுரை

தஞ்சாவூர்: மதுவிற்கு இலக்கு நிர்ணயம் செய்வதை விட்டுவிட்டு அதற்கு பதில் அம்மா உணவகங்கள் மூலம் தீபாவளிக்கு மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டியது தானே? என அறிவுறுத்தும்விதமாக அரசிடம் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Pon Radhakrishnan

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஜந்து கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரையாகச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பண்டிகை காலங்களில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முன்பே சரக்கை இறக்கிவைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்றார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு 600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பதில் அம்மா உணவகங்கள் மூலம் தீபாவளிக்கு தமிழ்நாடு அரசு 585 கோடி ரூபாய்க்கு இனிப்பு வழங்க வேண்டியது தானா? என அறிவுறுத்தும் விதமாக அரசிடம் கேள்வி எழுப்பினார்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு
தீபாவளியன்று மது குடித்துவிட்டால் குடும்பங்களில் பண்டிகை மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும் எனச் சொன்ன அவர், எனவே பண்டிகையின்போது ஒரு தமிழர்கூட மது அருந்தாமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details