தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பொருட்களை, அங்கீகாரச் சான்று பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் அதன் பெயரில் தயாரித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அந்த வரிசையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க இருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு! - geological code
தஞ்சாவூர்: 1940ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க இருக்கிறது என வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக 2013ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் சார்பில் புவிசார் குறியீடு பெற என் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அரசாணை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
பால்கோவாவின் சிறப்பு மற்றும் அதன் வரலாறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு இப்போது புவிசார் குறியீடு கிடைக்கவிருக்கிறது. மேலும் கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரூன் உள்பட 18 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.