தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ சுற்றுலா பயணிகளின் 1,500 கி.மீ விழிப்புணர்வு பயணம் - ஆட்டோவில் விழிப்புணர்வு

கல்வியின் மூலம் சுதந்திரம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 நாடுகளை சேர்ந்த 37 சுற்றுலா பயணிகள் ஆட்டோவில் பயணம் செய்துவரும் நிலையில் தஞ்சைக்கு வருகை தந்தனர்.

கல்வியின் மூலம் சுதந்திரம்
கல்வியின் மூலம் சுதந்திரம்

By

Published : Dec 31, 2022, 12:01 PM IST

ஆட்டோ சுற்றுலா பயணிகளின் 1,500 கி.மீ விழிப்புணர்வு பயணம்

தஞ்சாவூர்:இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 37 சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். கல்வியின் மூலம் சுதந்திரம் பெறலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1,500 கி.மீ சுற்றுலா பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி சென்னையில் இருந்து ஆட்டோவை அவர்களே ஓட்டி பயணத்தை தொடங்கியவர்கள். இன்று (டிசம்பர் 31) தஞ்சை வந்தனர். தஞ்சையில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, மேலூர், மதுரை வழியாக ஆட்டோ ரிக்சா பயணத்தை தொடங்குகின்றனர்.

இவர்கள் வருகிற 6ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர். 10 நாட்கள் பயணத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடுகின்றனர்.

இதையும் படிங்க: வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது

ABOUT THE AUTHOR

...view details