தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஆத்துமநேசர் தேவாலயத்தில் பரிசுத்த பரிவதம் என்ற ஜெபக்கூடம் உள்ளது. இந்த ஜெபக்கூடத்தில் பொங்கல் தினத்தையொட்டி சிறப்பு ஜெப வழிபாடு நடந்தது. அதில், தஞ்சை மாவட்ட மக்கள், பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
இதில், 30க்கும் மேற்பட்டோர் வல்லம் புதுாரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள சர்வீஸ் ரோட்டில், நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த கார் ஒன்று, ஜெப கூடத்திற்கு நடந்து போன பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரில் சிக்கி, பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கவிதா (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.