தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் யோகராஜ் வயது (26).
தஞ்சாவூரில் நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! - தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்
தஞ்சாவூர்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![தஞ்சாவூரில் நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! தஞ்சையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:28:00:1599472680-tn-tnj-04-gundas-act-script-7204324-07092020135523-0709f-01114-646.jpg)
அதே ஊரைச் சேர்ந்த தனசேகரன் மகன் கவியரசு (28), பாதிரி மேடு பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் திருவசந்தகுமார் வயது (22), மருத்துவக்குடி தனசேகரன் மகன் சிலம்பரசன் ( 31), ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ் முக் சேகர் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரையை செய்ததன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் சரககாவல் நிலைய ஆய்வாளர்கள் தாக்கல் செய்த இதர ஆவணங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் யோகராஜ், வசந்தகுமார், கவியரசு, சிலம்பரசன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட குற்றவியல் நடுவருமான கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.