தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்ற நான்கு பேர் கைது: போலீஸ் விசாரணை!

தஞ்சாவூரில் கஞ்சா விற்ற முன்னாள் ராணுவ வீரர் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா விற்ற நான்கு பேர் கைது
கஞ்சா விற்ற நான்கு பேர் கைது

By

Published : Jul 3, 2021, 11:58 AM IST

தஞ்சாவூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் சிறப்பு தனிப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் காவல் துறையினர் ஒரத்தநாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒரத்தநாடு கலைஞர் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் குரு (40), யானைகார தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் அமர்நாத் (19), அதே பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் மகன் சதீஷ் (28), ஒரத்தநாடு சுண்ணாம்புக் காரை தெருவைச் சேர்ந்த மணிமாறன் மகன் பிரசாத் (18) ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

கஞ்சா பறிமுதல்:

பின்னர், அவர்களது உடைமைகளை காவல் துறையினர் சோதனை செய்தபோது, அவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா, 9 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை இருந்தது தெரியவந்து. இது குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனை செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த கஞ்சா, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தலைமறைவாகவுள்ள பூமிநாதன், முகேஷ் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்னந் தோப்பில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details