தஞ்சை மாவட்ட கடற்கரைப் பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு, முடுக்குக்காடு, கருங்குளம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கடற்கரையோரங்களில் அலையாத்திக்காடுகள் நிறைந்துள்ளன.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாத இறுதி வரை வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருவது உண்டு. ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மாலத்தீவு, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்டப் பல நாடுகளிலிருந்து இங்குவரும் பறவைகள் இந்தக் காடுகளில் இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.