தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை உணவு திருவிழாவில் காய்கறியில் விலங்குகள்.. கலக்கிய கல்லூரி மாணவர்கள்!

தனியார் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் கல்லூரி மாணவர்கள் காய்கறி மூலம் விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை உருவாக்கி அசத்தினர்.

தஞ்சையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழா
தஞ்சையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழா

By

Published : May 15, 2023, 12:31 PM IST

தஞ்சையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழா

தஞ்சாவூர்:தனியார் கல்லூரியில் நடைபெற்ற உணவு திருவிழாவின் போது மாணவர்கள் அவரவர் படைப்புகளை வைத்து விழாவை அசத்தினர். தஞ்சையை அடுத்த பாரத் கேட்டரிங் கல்லூரியில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற உணவு திருவிழாவில் காய்கறிகள், கேக், சாக்லெட் இவற்றைக் கொண்டு விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள், பூக்கள் என விதவிதமாக வடிவமைத்து உணவு தொழில்நுட்ப மாணவர்கள் காட்சிக்கு வைத்து அசத்தினர்.

உணவு திருவிழாவுக்கு வந்தவர்கள் இவற்றின் முன்பு நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தஞ்சை பாரத் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் சார்பில் 'இந்திரத் உணவு திருவிழா ௨௦௨௩' கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாணவர்கள் பாகற்காயில் டைனோசர், பூசணிக்காயில் மீன், பரங்கிகாய் மற்றும் தர்பூசனியில் பூக்கள், கேரட், முள்ளங்கியில் சேவல், கேக் மூலம் முதலை, ஆமை, சாக்லெட்டில் தேள்,பட்டாம்பூச்சி என விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள், பூக்கள் என விதவிதமாக வடிவமைத்து மாணவர்கள் அசத்தி காட்சிக்கு வைத்து இருந்தனர்.

பின்னர் இவற்றைச் சிறப்பாக காட்சிப்படுத்திய மாணவர்களுக்குக் கல்லூரி தாளாளர் புனிதா கணேசன் பாராட்டு தெரிவித்துத் தேர்வு செய்யப்பட்ட வடிவாமிப்புகளுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க:வால்பாறையில் வரையாடுகளுக்கு தொந்தரவு - வனத்துறையினரின் நடவடிக்கை தேவை

ABOUT THE AUTHOR

...view details