தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனியார் பள்ளியில் இன்று உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பெற்றோர் தங்கள் பங்காக குழந்தைகளுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவு பண்டங்களை செய்து உணவுத் திருவிழாவில் காட்சிப்படுத்தி அசத்தினர்.
பாரம்பரிய உணவுகளான கம்பு, அடை, தோசை, பணியாரம், வரகு, அரிசி, புட்டு, முறுக்கு, சீடை, அதிரசம், ஆரோக்கிய கசாயம் என எண்ணற்ற உணவுப் பண்டங்களை பார்வைக்கு வைத்திருந்தது பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது.