தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்ணீர் அஞ்சலி ஃபிளக்ஸ் பேனர் விழுந்து பெண் பலி!

தஞ்சாவூர்: திருவோணம் அருகே கண்ணீர் அஞ்சலி ஃபிளக்ஸ் பேனர் விழுந்ததில், சாலையில் சென்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஃபிளக்ஸ் பேனர் வைத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest

By

Published : Apr 29, 2021, 7:41 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் தந்தை முத்துவீரப்பன் மரணம் அடைந்தார்.

இதையடுத்து திருவோணம் அருகேயுள்ள மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் ரவிச்சந்திரன், தனது தந்தையின் பட திறப்பு விழாவிற்கு ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இந்தநிலையில், அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி அம்மணிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி என்பவர், தனது சகோதரர் இறந்து எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அவருடன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மேட்டுப்பட்டி வந்தபோது ரவிச்சந்திரன் வைத்திருந்த ஃபிளக்ஸ் பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து திருவோணம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஃபிளக்ஸ் பேனரை பறிமுதல் செய்து, அதை வைத்த ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

படுகாயம் அடைந்து அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட விஜயராணி, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை உயர் நீதிமன்றம் சாலை ஓரங்களிலும், பொதுமக்களுக்கு இடையூறாகவுள்ள இடங்களிலும் ஃபிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும், சரியான விதிமுறைகளை ஊராட்சி நிர்வாகம், காவல்துறை அலுவலர்கள் பின்பற்றாதது விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details