தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிடிபட்ட நண்டை கடலில் விட்டால் ரூ.200 - மீனவ கிராமத்தில் புதிய திட்டம்! - Thanjavur news

வலையில் அகப்படும் சினை நண்டை கடலிலேயே உயிருடன் விட்டு வந்தால் நண்டு ஒன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என மீனவ கிராமம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மீனவ கிராமத்தில் புதிய திட்டம்
மீனவ கிராமத்தில் புதிய திட்டம்

By

Published : Jul 27, 2021, 6:11 AM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொள்ளுக்காடு ஒரு மீனவ கிராமம் ஆகும். இங்குள்ள மீனவர்கள் நண்டு வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருவதால் கடல் வளம் குறைந்து மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கொள்ளுக்காடு மீனவ கிராம கூட்டத்தில் வலையில் அகப்படும் சினை நண்டை உயிருடன் கடலிலே விட்டு விட்டு அதை வீடியோவாக எடுத்து அனுப்புபவர்களுக்கு, ஒரு நண்டுக்கு ரூ.200 ஊக்கத்தொகை என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கிராமத்து மீனவர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி கடல் வளத்தை பெருக்கவும், கடல் வளத்தை காக்கவும் புது முயற்சியில் இறங்கியுள்ள நிகழ்வு அனைத்து தரப்பு சமூக ஆர்வலர்கள் இடத்தில் நல்ல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் காணாமல்போன சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details