தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2019, 11:58 PM IST

Updated : Sep 7, 2019, 3:33 PM IST

ETV Bharat / state

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மாயம்!!

தஞ்சாவூர்: கடலூரில் புதிய படகை வாங்கிக் கொண்டு ராமேஸ்வரத்தை நோக்கி 10 மீனவர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் நடுக்கடலில் சூறைக் காற்றினால் படகு கடலில் மூழ்கியது. இதில் எட்டு மீனவர்கள் கடலில் மாயமானர்கள்.

fishermen-demand-to-immediate-search

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பத்து மீனவர்கள் கடலூரில் புதிய படகை வாங்கிக் கொண்டு ராமேஸ்வரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதிகாலையில் மல்லிப்பட்டினத்தில் இருந்து 15 நாட்டிகல் தூரத்தில் நடு கடலில் சூறைக் காற்றினால் படகு கடலில் மூழ்கியது. பின் மீனவர்கள் கடலில் குதித்து நீந்தத் துவங்கியினர். இதில் செந்தில்வேல், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்கள் நீந்தி மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தனர். கரை சேர்ந்த இரண்டு மீனவர்களும் சிகிச்சைக்காக மல்லிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள எட்டு மீனவர்களான முனியசாமி, ரஞ்சித்குமார், மதன், இலங்கேஸ்வரன், தரக்குடியான், முனீஸ்வரன், உமாகாந்த் ஆகிய மீனவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் சோகம் அடைந்த மீனவர்கள், உறவினர்கள் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மாயம்

இதனை அடுத்து தாசில்தார் அப்துல் ஜாபர் மீனவர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். மேலும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தப்படும் என்றும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஹெலிகாப்டர் கடல்பகுதியில் செலுத்துவது கடினமான காரியம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று மீனவர்கள் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். எட்டு மீனவர்கள் கடலில் மாயமான சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Last Updated : Sep 7, 2019, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details