தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடித் தடைக்காலத்தைக் குறைக்கக்கோரி மீனவர்கள் கோரிக்கை

தஞ்சாவூர்: ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக, மீன்பிடித் தடைக்காலத்தைக் குறைக்கக்கோரி மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

fishermen-demand-to-government-to-reduce-fishing-ban-period
fishermen-demand-to-government-to-reduce-fishing-ban-period

By

Published : Apr 16, 2020, 1:36 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாசிய பொருள்களை விற்பனைசெய்யும் பொருள்களைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடவும், சில தொழில்களில் ஈடுபடுவோரைத் தவிர அனைத்து துறையினரும் வேலைவாய்ப்பினை இழந்து வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவையடுத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றுமுதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்பிடிக்க அனுமதி கோரியுள்ளனர்.

மீனவர்கள் கோரிக்கை

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடந்த 21 நாள்களாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்றிலிருந்து 60 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தாங்கள் மீன்பிடித் தடைக்காலத்திலும் வீட்டிலேயே இருந்தால் ஒருவேளை உணவிற்கே மிகுந்த சிரமத்திற்குள்ளாவோம்" என்றனர். மேலும், மீன்பிடித் தடைக்காலத்தை அரசுகுறைக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மீன்பிடித் தடைக்காலம் - மீனவர்கள் நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details