தஞ்சாவூரில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் கூட்டம், மல்லிப்பட்டினம் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் தாஜுதீன் தலைமை வகித்தார். நாட்டுப் படகு மீனவர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கடற்கரையோரம் கடற்பாசி எடுப்பதைத் தடுக்க வேண்டும், வெளி மாவட்ட விசைப்படகுகள் தஞ்சை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதைத் தடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
'தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிக்கக்கூடாது' - மீனவர்கள் கூட்டத்தில் முடிவு! - மீனவர்கள் சங்கத்தின் கூட்டம்
தஞ்சாவூர் : கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியோ, அதிக திறனுள்ள விசைப்படகுகளை பயன்படுத்தியோ மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என மீனவர்கள் கூட்டத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கும், நாட்டுப் படகுகளுக்கும் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை மிகக் குறைவானது என்பதால், உடனடியாக கூடுதல் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். தஞ்சை கடற்பகுதி ஆழம் குறைந்த பகுதி என்பதால், இந்த பகுதியில் பெரிய விசைப்படகுகள் மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது, இதனால் கடல் வளம் குறையும். எனவே, இதற்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க :அனல் மின் நிலைய பாலம் அமைக்கும் பணி - மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம்