கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து விசைப்படகுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என்பதால் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்க தடை இல்லை என்பதால் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலும் நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் கரையோரப் பகுதியில் அதாவது கடற்கரையிலிருந்து நான்கு பாக தொலைவில் மட்டும்தான் கடலில் மீன்பிடிக்க முடியும். விசைப்படகுகள் போன்று ஆழ்கடல் பகுதியில் சென்று மீன் பிடிக்க முடியாது எனவே கரையோரங்களில் அகப்படும் மிகக் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் பிடிக்க முடியும்.