தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 18ஆம் தேதி மேற்கு இந்தியாவிலிருந்து கும்பகோணம் திரும்பிய நபர், கரோனா அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்ச் 25ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
தஞ்சையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார் - corona require
தஞ்சாவூர்: மாவட்டத்தில் முதன் முதலாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்.
thajavur-was-healed
இந்த நிலையில் அவர் இன்று பூரண குணமடைந்தார். அதனால் அவரை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், மண்டல கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு 14 நாள்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா: குணமடைந்த 13 பேர் ஒரே நாளில் விடுவிப்பு