தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரிய கோயில் குடமுழுக்கு: 300 அடி உயரம் செல்லக்கூடிய பிரத்யேக ஊர்தி! - தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூர்: பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் 300அடி உயரம் செல்லக்கூடிய ஊர்தி பயன்படுத்தப்படவுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை திருச்சி மண்டல இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

thanjavur big temple  fire safety procedure in thanjavur temple  தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு  தஞ்சாவூர் குடமுழுக்கு
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை திருச்சி மண்டல இயக்குநர் மீனாட்சி விஜயகுமார்

By

Published : Feb 3, 2020, 11:47 PM IST

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா வரும் புதன்கிழமை நடக்கவுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை திருச்சி மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “சென்னை தீயணைப்பு மீட்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் முதல் முறையாக தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குப் பணிக்காக 300 அடி உயரத்திற்கு மேல் செல்லக்கூடிய 104 மீட்டர் உயரம் கொண்ட புதிய ரக சூழல் மேஜை ஏணி வாகனம் பயன்படுத்தப்படவுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடு

இவ்வாகனம் நீரியல் அழுத்தத்தால் வேலை செய்யக்கூடியது. புனிதநீரை யாககுண்டத்திலிருந்து 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் எடுத்துச் செல்ல இந்தவாகனம் பயன்படுத்தப்படும். கடந்த 1997ஆம் நடைபெற்ற குடமுழுக்கின்போது ஏற்பட்ட அசம்பாவிதம் போன்ற எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க கிட்டதட்ட 40 ஊர்திகளும் 536 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை திருச்சி மண்டல இயக்குநர் மீனாட்சி விஜயகுமார்

யாகசாலையில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, 157 டிகிரி செல்சியஸ் வரை தீப்பற்றாத வகையில் யாககுண்டம் ஃபயர் ரெஸ்ட்ரிக்ஸன் எனப்படும் தீயணைப்பு பாதுகாப்பு திரவத்தை கலந்து அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வேட்டி சேலை வழங்கிய அமைச்சர் வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details