பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (மே.30) மாலை பட்டுக்கோட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மதுக்கூர் - அதிராம்பட்டினம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து விட்டுப் பின்னர், பட்டுக்கோட்டை வந்தடைந்தார் .
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஓவியர்கள் நலச்சங்கத்தின் மூலம் வரையப்பட்ட கரோனா ஓவியத்தின் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
பெருமாள் கோயில் தெருவில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள நோயாளிகளிடம் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். அதில், 'கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
தனியார் பள்ளிகளில் பணி புரிந்த ஆசிரியர்கள், தற்பொழுது வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான நிதி உதவி செய்வதற்கு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல, முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் நிதி உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு