தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்தவர் பாண்டி(45). கூலித் தொழிலாளியான இவருக்கு 5 குழந்தைகள். இவரது மனைவி ரேணுகா தேவி குடும்ப பிரச்னை காரணமாக ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறார்.
குடும்பத் தகராறு மகள்களை ஆற்றில் வீசிய தந்தை! - குழந்தைகளை ஆற்றில் வீசிய தந்தை
தஞ்சாவூர்: குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் பாண்டி என்பவர் அவரது மகள்கள் இருவரை ஆற்றில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
father
இந்நிலையில் ஆத்திரமடைந்த பாண்டி குடிபோதையில் தனது குழந்தைகளில் லாவண்யா(17) ஸ்ரீமதி (7) என்ற இருவரை அப்பகுதியில் உள்ள அரசலாற்றில் வீசியதாக கூறப்படுகிறது. இதில் லாவண்யாவை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
மேலும் ஸ்ரீமதி என்ற குழந்தையை பொதுமக்கள், தீயணைப்பு துறையினர் தேடிவருகின்றனர். கும்பகோணம் மேற்கு காவல்துறை விசாரணை இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் பாண்டியனை தாக்கியதில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.