தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி குமார் (39). இவரின் மனைவி 2015ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது 10 வயது மகளுடன் குமார் வசித்து வந்தார். 2017ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்த குமார், தனது சொந்த மகள் என்றும் பாராமல், பாலியல் வல்லுறவு செய்தார். இச்சம்பவம் குறித்து சக தோழியிடம் சிறுமி தெரிவிக்க, உடனடியாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் சென்றது.
அதனடிப்படையில், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்புடைய கிராமத்தில் விசாரித்தனர். இதில் அச்சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் கொடுமை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அமைப்பினர் புகார் செய்தனர்.