திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு வடக்கு தெருவைச் சேர்ந்த அண்ணாசாமி மகன் இளங்கோவன்(50). கடந்த மாதம் இவரது மகள் இறந்து விட்டார். அந்த துக்கத்தில் இருந்தவர் மனைவி ஊரான நேமத்தில் வசித்து வந்தார்.
மகள் இறந்த துக்கத்தில் பூச்சி மருந்து குடித்து தந்தையும் உயிரிழப்பு - Local news
தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே மகள் இறந்த துக்கத்தில் தந்தை, பூச்சி மருந்து குடித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி தனது வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பழைய ஆற்காட்டில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை பூதலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து இளங்கோவன் மனைவி ஜமுனா ராணி திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.