தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் மத்திய அரசு மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. விவசாயிகள் தங்கள் வாழ்வியலை இழக்கும் நிலை ஏற்படும். காவிரி பாசன மாவட்டங்களில் அழிக்கும் மீத்தேன் எரிவாயு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி
தஞ்சாவூர்: மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிடக்கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது.
farmers
அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று போராடும் விவசாயிகள் மீது மாநில அரசு வழக்குப்பதிவு செய்கிறது. இதனை கண்டித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தனர். பின்னர் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பேரணியில் மீத்தேன் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான முழக்கங்கள் செய்யப்பட்டன.