தஞ்சாவூர்:கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் செயலாளர் கடந்த ஆண்டு 26 லட்சத்து 6 ஆயிரம் விவசாயிகள் தங்களின் 40 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பிற்கு ரூபாய் 2ஆயிரத்து 324 கோடிக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடுக்கு நிவாரண தொகை வழங்கக் கோரி விவசாயிகள் நூதன போராட்டம் - தமிழ்நாடு அரசு
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான விவசாயிகள் திரண்டு தலையில் சாக்கை முக்காடாக போட்டு, பயிர் காப்பீடுக்கு நிவாரண தொகை வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Etv Bharat
இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகையாக காப்பீட்டு நிறுவனங்களால் மிக சொற்பமாக, 481 கோடி ரூபாய் இழப்பீடு வரப்பெற்றுள்ளதாகவும், இதனை இனியும் காலம் தாழ்த்தாது வரும் தீபாவளிக்கு முன்பு சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு வரவு வைக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி இந்த நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்தி மத மோதல்களை ஏற்படுத்திட முனைகிறது பாஜக - முத்தரசன்