தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசு புதிய மின் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் - Thanjavur district Kumbakonam

தஞ்சாவூர்: மத்திய அரசின் புதிய மின் திருத்த சட்டம் 2020ஐ கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கையெழுத்திட்டனர்.

Farmers protest
Farmers protest

By

Published : Jun 28, 2020, 12:32 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் நெசவாளர்களுக்கும் மின்சாரத்தில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரும் அனுபவித்து வரும் மின்சார மானியத்தை மத்திய அரசின் புதிய மின் திருத்த சட்டம் 2020 ரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், இதனை கைவிடக் கோரியும் மத்திய அரசுக்கு நான்கு லட்சம் விவசாயிகள் கையெழுத்து இட்டு மனு அனுப்பும் போராட்டம் வளையபேட்டையில் தொடங்கியது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக புதிய மின் திட்ட கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details