தஞ்சாவூர்:தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், “பிரதமர் மோடி, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ஸ்காலர்ஷிப் ஒன்றை அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் ரூபாய் 10 ஆயிரமும், 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும், இந்தப் பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள், ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாம் அல்லவா, எனவே பகிருங்கள் நண்பர்களே” என்ற வாசகத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவு எண் என அச்சிடப்பட்டு, தமிழ்நாடு முழுதும் பரப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை பார்ப்பவர்கள் மற்ற நபர்களுக்கு அனுப்புவதால் இந்த தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தஞ்சாவூர் முனிசிபல் அலுவலகத்திற்குச் சென்று ஊக்கத்தொகை விண்ணப்பம் கேட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
முனிசிபல் அலுவலகத்தில் ஊக்கத் தொகை வழங்குவதற்கு என எந்த விண்ணப்பமும் வழங்குவதில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தவறான தகவல் ஆகும் என கூறி பெற்றோர் மாணவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இது குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் கூறுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சியில் ஊக்கத்தொகை வழங்குவதற்கு என எந்த விதமான விண்ணப்பமும் வழங்கப்படுவதில்லை.