போலி ஆவணங்கள் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த விவகாரம் தொடர்பாக. தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் சுபத்ரா, திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அவனியாபுரம் கிரசெண்ட் மேல்நிலைப்பள்ளியில் போலி ஆவணங்களை கொடுத்து, இடைநிலை ஆசிரியர்களாக அன்சாரி, ஆமீனா (என்கிற) ராஜாத்தி இதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஸ்டீபன், கண்ணையன் ஆகிய நான்கு பேர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி கொடுத்த புகாரின் பெயரில், திருநீலக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்துவந்த நிலையில் சென்னை சிபிசிஐடி இயக்குநர் உத்தரவின்படி, இந்த வழக்கு தஞ்சை சிபிசிஐடி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு மேல்விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இவ்வழக்கு திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.